உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெந்து தணிந்தது காடு 2 : விரைவில் துவங்குகிறது

வெந்து தணிந்தது காடு 2 : விரைவில் துவங்குகிறது

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !