ஐஸ் பாத் எடுத்த சமந்தா
ADDED : 902 days ago
நடிகை சமந்தா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகிடையே சமீப்தில் வெளியான படம் ‛சாகுந்தலம்'. ஆனால் இந்தப்படம் அவருக்கு அதிர்ச்சியை தோல்வியை தந்தது. தற்போது சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் தொடரின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்காக ஆக் ஷன் உள்ளிட்ட பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருவதோடு உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.
மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள சமந்தா உடல்நிலை பராமரிப்பில் அதிக கவனம் எடுத்து வருகிறார். அந்தவகையில் இப்போது ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீரில் அமர்ந்து ஐஸ் பாத் எடுத்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து, 'இது மிகவும் டார்ச்சர் தரக்கூடியது. பனி குளியல்' என பதிவிட்டுள்ளார் சமந்தா.