ஆக்ஷன் கதாநாயகிகளாக மாறும் பாலிவுட் நடிகைகள்!
ADDED : 883 days ago
பாலிவுட் சினிமாவில் கடைசியாக வெளியான பதான் படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் பெரிய வெற்றி படமும் வரவில்லை. யாஷ் ராஜ் பிலிம்ஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். தூம், பதான், டைகர் போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம். இப்போது பதான், டைகர் போன்ற படங்களை ஹாலிவுட் பட பாணியில் ஸ்பை யூனிவர்ஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தற்போது கதாநாயகிகளை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரினா கைப் இருவரையும் இணைத்து ஒரு பிரமாண்டமான ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.