விஜய் சேதுபதி படத்திற்கு விடிவு காலம் பிறந்தது
ADDED : 912 days ago
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா, நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2021ல் வெளிவர வேண்டிய இப்படம் ஒரு சில காரணங்களால் கிடப்பில் இருந்தது. இப்போது இந்த படம் வரும் மே 19 அன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை தமிழகமெங்கும் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகின்றனர்.