உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷூடன் முதன் முறையாக இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஜி.வி.பிரகாஷூடன் முதன் முறையாக இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முறையாக 'டியர்' என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரொமாண்டிக் காதல் படமாக இது உருவாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !