கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்
ADDED : 951 days ago
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமல்ஹாசன் முன்நின்று படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.