அதற்குள் விவாகரத்தா? திருமண புகைப்படங்களை ‛டெலிட்' செய்த சின்னத்திரை ஜோடி!
ADDED : 933 days ago
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அதிலும், சம்யுக்தா விஷ்ணுகாந்தை நினைத்து இன்ஸ்டாகிராமில் பல உருக்கமான பதிவுகளை வெளியிட்டிருந்தார். கடந்த மார்ச் 3ம் தேதி தான் இருவருக்கும் கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த திருமண புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் காதலில் இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இதுகுறித்து இதுவரை இருவருமே எந்தவொரு விளக்கமும் தரவில்லை. எனவே, கருத்துவேறுபாடு காராணமாக இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.