சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி காலமானார்
ADDED : 893 days ago
சின்னத்திரை நடிகையான விஜயலட்சுமி(70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் விஜயலட்சுமி. பெரும்பாலும் பாட்டி வேடத்தில் நடித்து வந்தார். 10க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதற்கும் சிகிச்சை எடுத்து இரு தினங்களுக்கு முன்னர் தான் வீடு திரும்பினார். இந்நிலையில் அதிகாலை தூக்கத்திலேயே இவரது உயர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.