வாசகர்கள் கருத்துகள் (3)
Naan kooda YouTuber Irfan nu nenachen
அப்போது அதுபற்றிய தெளிவு எவரிடமும் இல்லை
இப்பவாக இருந்த டங்கு வாறு அறுந்துபோயிடும் ..
'பாட்டுக்கோட்டை' என்று போற்றப்பட்டவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுகளில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில், தனது 29 வயதிலேயே மரணம் அடைந்தார்.
அவரது பாடல்களை பற் றி சிலாகித்து பேசுபவர்கள் கூட அவரது மரணம் பற்றி பேசுவதில்லை. 29 வயதிலேயே இறந்துவிட்டார் என்று பரிதாபமாக சொல்லிவிட்டு முடித்துக் கொள்வார்கள். ஆனால் அவரது மரணம் இயற்கையானது அல்ல. அது ஒரு மருத்துவக் கொலை.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகள் தான் வலிமையானதே தவிர அவரது உடல் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. வயதை தாண்டிய தோற்றம் மெலிந்த தேகம் என்றே கடைசி வரை காணப்பட்டார்.
பல உடல்நல பிரச்சனைகளில் அவர் சிக்கி இருந்தாலும் சைனஸ் பிரச்னை தான் அவருக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி, இறந்தார்.
இது குறித்து அப்போதைய மருத்துவர்கள் இது ஒரு 'மருத்துவ விபத்து' என்று குறிப்பிட்டு பட்டுக்கோட்டையார் மரணத்தை எளிதாக கடந்து சென்று விட்டார்கள். தவறான சிகிச்சைக்கு காரணமான டாக்டர்கள் மீதோ, மருத்துவமனையில் மீதோ எந்தவித புகாரும் யாரும் தரவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
Naan kooda YouTuber Irfan nu nenachen
அப்போது அதுபற்றிய தெளிவு எவரிடமும் இல்லை
இப்பவாக இருந்த டங்கு வாறு அறுந்துபோயிடும் ..