வாசகர்கள் கருத்துகள் (1)
இன்றுதான் வயதுக்கு ஒத்த காரெக்ட்டர் கிடைத்துள்ளது.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா பாட்டியாக நடித்த படம் தாய்கிழவி. அவரது 75வது படம் இது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷனும், பேஷன் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ஆனாலும், படத்தின் டிஜிட்டல், சாடிலைட் உள்ளிட்ட வியாபாரம் முடிந்துவிட்டதால் இப்பவே படம் லாபம் சம்பாதித்துள்ளதாம்.
இந்த படத்தில் உசிலம்பட்டி பவுனுதாய் ஆக ராதிகா காமெடி கலந்த கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவர் மகன்களாக அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், மகளாக ரேச்சல் நடித்து இருக்கிறார்கள். காக்காமுட்டை மணிகண்டனிடம் பணியாற்றியவராம் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ராதிகாவின் கெட்அப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஆண்டு சரத்குமார் நடித்த 'டியூட், கொம்புசீவி' படங்களில் அவர் கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு ராதிகாவுக்கு அது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுரை வட்டார சடங்குகளை இந்த படம் பேசுகிறதாம். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருக்கிறார்.
இன்றுதான் வயதுக்கு ஒத்த காரெக்ட்டர் கிடைத்துள்ளது.