பள்ளியை தத்தெடுத்த சிவராஜ்குமார் தம்பதி
நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் கர்நாடகாவில் விஜயநகர மாவட்டத்தில் உள்ள இங்கலாகி என்கிற கிராமத்தில் உள்ள அன்னபூர்னேஸ்வரி வித்யபீதா ரெசிடென்சி பள்ளியை தத்தெடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான வேதா என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவராஜ்குமார் கலந்துகொண்ட போது அடிப்படை வசதிகளற்ற இந்த பள்ளியின் அவல நிலை அவரது கவனத்திற்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிவராஜ் குமாரின் மனைவி இந்த பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பள்ளியின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்தார். இதைத்தொடர்ந்து பள்ளியை சீரமைக்கவும் மற்றும் இன்னும் மாணவர்களுக்காக கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பள்ளி நிர்வாகத்திடம் மிகப்பெரிய தொகையையும் வழங்கி உள்ளார். அதுமட்டுமல்ல நடிகர் சிவராஜ்குமார் இதுகுறித்து கூறும்போது மைசூரில் உள்ள சக்தி தாமா என்கிற பள்ளியின் தரத்திற்கு இந்த பள்ளியை கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.