மீண்டும் வருகிறார் தருண்
ADDED : 870 days ago
மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தருண். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னர் ஹீரோவாக நடித்தார். தமிழில் 'காதல் சுகமானது', 'புன்னகை தேசம்', 'எனக்கு 20 உனக்கு 18' படங்களில் நடித்தார். தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த தருண் இப்போது வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதோடு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருகிறார். இந்த தகவலை தருணின் தாயாரும், நடிகையுமா ரோஜா ரமணி வெளியிட்டிருக்கிறார்.