உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சஞ்சய் தத்

லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சஞ்சய் தத்

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் வில்லனாக சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய், சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது லியோ படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இந்த லியோ படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கதைப்படி விஜய்யின் தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய், சஞ்சய் தத் ஆகிய இருவருமே இந்த படத்தில் கேங்க்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார்கள். அதோடு விஜய் - சஞ்சய் தத் இருவரும் நடித்துள்ள காட்சிகளை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகவும், மிரட்டலாகவும் படமாக்கி இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். இப்படி லியோ படத்தில் சஞ்சய் தத், விஜய்யின் தந்தையாக நடிப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !