ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார்
ADDED : 867 days ago
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார். பிரவுன் 87வது வயதில் கடந்த மே 18, அன்று அமேரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்தது.
ஜிம் ப்ரவுன் ஹாலிவுட் நடிகர் மட்டுமில்லாமல் கால்பந்து வீரர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் உடன் ரன்னிங் மேன், 100 ரைபிள்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.