உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூன் மாதத்தோடு விஜய்யின் லியோ படப்பிடிப்பு முடிவடைகிறது!

ஜூன் மாதத்தோடு விஜய்யின் லியோ படப்பிடிப்பு முடிவடைகிறது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதையடுத்து லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அங்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அங்கு லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளது. ஏற்கனவே இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களில் இறுதிக்கட்ட பணிகளை மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !