தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்!
ADDED : 870 days ago
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகராக நுழைந்து அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த அருண் ராஜா காமராஜ், பின்னர் கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கினார். தற்போது வெப் சீரியல் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் இணைந்திருக்கிறார்.
இது குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறுகையில், கேப்டன் மில்லர் படத்தில் அருண் ராஜா காமராஜ், அரக்க சம்பவம் என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருப்பதாகவும், இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கும் நிலையில் சிவராஜ்குமார், உரியடி விஜயகுமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.