உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிதேஜா படத்திற்காக குரல் கொடுத்த நான்கு ஹீரோக்கள்

ரவிதேஜா படத்திற்காக குரல் கொடுத்த நான்கு ஹீரோக்கள்

தெலுங்கு நடிகர் ரவிதேஜா தற்போது நடித்து வரும் படம் டைகர் நாகேஸ்வரர ராவ். இந்த படம் ஆந்திராவை சேர்ந்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் 70களின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு கிரிமினலை பற்றிய படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பான் இந்தியா படமாக மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து படத்தின் டீசருக்காக தமிழில் நடிகர் கார்த்தி, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தியில் ஜான் ஆபிரகாம் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இதில் இதே போன்று 70களின் பின்னணியில் வாழ்ந்த ஒரு கிரிமினல் கதையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான குறூப் என்கிற படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !