வார் 2 ரிலீஸ் தேதி இதோ
ADDED : 898 days ago
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இந்த படத்தை ஜனவரி 24, 2025ம் அன்று வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.