சென்னையில் சரத்பாபு உடல் தகனம் : திரையுலகினர் அஞ்சலி
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் நேற்று காலமானார். தெலுங்கு பிலிம் சேம்பரில் நேற்று அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரின் தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
செந்தாழம்பூவில் வந்தாண்டிய தென்றல் என பாடியவர் காற்றில் கரைந்து போனார்.