உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உலகத் தரத்தில் ‛தங்கலான்'

உலகத் தரத்தில் ‛தங்கலான்'

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. இந்த படம் 19ம் நூற்றாண்டில் கே.ஜி.எப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் கதை. அப்போது அவர்கள் சந்தித்த இன்னல்களை குறித்து இப்படம் பேசும். இந்த படத்திற்காக கடந்த 6, 7 மாதங்களாக விக்ரம் வேறு எந்த படங்களிலும் நடிக்க செல்லவில்லை. 105 நாட்கள் படப்பிடிப்பு நடந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. உலகத் தரத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்றார் ரஞ்சித்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !