மகன் இயக்கத்தில் பாரதிராஜா : படப்பிடிப்பு தொடங்கியது
ADDED : 880 days ago
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இதுவரை நடிகராக இருந்தார், தற்போது இயக்குனராகி 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்ஷானா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், காசி தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். வெண்ணிலா கிரியேஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் பூஜையுடன் தொடங்கியது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இரண்டு ஜாதிகளை சேர்ந்த காதலர்களை ஊரே திரண்டு பழிவாங்க துடிக்கிறது. அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாரதிராஜா ஊரை சமாளித்து எப்படி காதலர்களை சேர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.