நேரடியாக ஒடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம்!
ADDED : 882 days ago
கடந்த 2017-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகி இயக்கி வெளிவந்த திரைப்படம் மாநகரம். சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ஹிந்தியில் 'மும்பைக்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மும்பைக்கர்' திரைப்படம் வருகின்ற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர் .