ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா
ADDED : 946 days ago
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று இப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னாவின் அறிமுக பாடல் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. அந்த பாடல்கான ஒத்திகை இப்போது நடைபெற்று வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமன்னா.