இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி
ADDED : 860 days ago
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மகள் ஹீரோயின் ஆனது போல் மேனகாவின் இன்னொரு மகளும், கீர்த்தி சுரேஷின் சகோதரியுமான ரேவதி சுரேஷ் தற்போது இயக்குனராகி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இப்போது ஒரு புதிய குறும்படம் ஒன்றை ரேவதி சுரேஷ் இயக்கியுள்ளார். இதற்கு 'தேங்க் யூ' என்று தலைப்பு வைத்துள்ளனர் . இப்படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இயக்குனரான தனது சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்தை கீர்த்தி, ரேவதியின் அப்பாவான தயாரிப்பாளர் சுரேஷ் தயாரிக்கிறார்.