ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
ADDED : 945 days ago
கர்ணன் படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் ‛மாமன்னன்'. உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்தமாதம் படம் வெளியாக உள்ளது. உதயநிதி அரசியலுக்கு சென்றுவிட்டதால் இதுவே அவரின் கடைசிப்படம் என அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி எழுதிய இந்த பாடலை வடிவேலு பாடினார். உணர்வுப்பூர்வமாக அமைந்த இந்தபாடல் யு-டியூப் தளத்தில் 58 லட்சத்திற்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'ஜிகு ஜிகு ரயில்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இதை ரஹ்மானே பாடி உள்ளார். தற்போது இந்தப்பாடல் வைரலாகி வருகிறது.