மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
857 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
857 days ago
பிரபல மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் தமிழ் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகள் கீர்த்தி சுரேஷ் கடந்த பத்து வருடமாக தென்னிந்திய திரை உலகில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிப்பதன் மூலம் தமிழ் நடிகையாகவே மாறிவிட்டார். பெரிய அளவில் இதுவரை கிசுகிசுக்களில் சிக்காமல் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வந்தாலும் கூட, கீர்த்தி சுரேஷ் குறித்த திருமண செய்தி ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் தனது நண்பரான பர்ஹான் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் இவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் பெரிய அளவில் உருவெடுத்தன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கீர்த்தி சுரேஷும் சமீபத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ்குமாரும் இது குறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நல்ல நண்பர்கள். பர்ஹான் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல, குடும்ப நண்பர் ஆவார். மேலும் எங்கள் குடும்பத்துடன் வளைகுடா பயணத்தின் போது பலமுறை உடன் வந்துள்ளார். இப்படி தவறான செய்தி பரப்புவது எங்களை மட்டும் அல்ல, அவரது குடும்பத்தையும் கூட பாதிக்கும். இது குறித்து எனது நண்பர்கள் தரப்பில் பலரும் விளக்கம் அளிக்க சொல்லி வற்புறுத்தியதாலேயே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். தயவு செய்து இனி இதுபோன்று ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சுரேஷ்குமார்.
857 days ago
857 days ago