ஹரிஷ் கல்யாண் படத்தின் செகன்ட் லுக் வெளியானது!
ADDED : 861 days ago
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நடப்பு சி.எஸ்.கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனமான ‛தோனி என்டர்டெய்ன்மென்ட்' தயாரிக்கும் முதல் படமாக 'எல் ஜி எம்' உருவாகியுள்ளது. நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இன்று இந்த படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விரைவில் டீசர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.