மே 30ல் வெளியாகும் சுனைனா படத்தின் டீசர்!
ADDED : 910 days ago
காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பிறகு விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் நடித்து வருகிறார்.
தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் ‛ரெஜினா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே 30 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.