மீண்டும் இணைந்த 'அடங்க மறு' கூட்டணி!
ADDED : 909 days ago
கடந்த 2019 ஆண்டில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் ‛அடங்க மறு'. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி திரைப்படமாக மாறியது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் கடந்த மூன்று வருடங்களில் நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதை கூறி காத்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் ஜெயம் ரவிக்கு கதை கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவியும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.