வெளியானது விஷ்வாக் சென் 11 படத்தின் பர்ஸ்ட் லுக்
ADDED : 872 days ago
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் மற்றும் நடிகர் விஷ்வாக் சென் தற்போது அவரின் 11வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா சைதன்யா இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து என்.டி.ஆரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் வெளியானாலும் இன்னும் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.