காதலன் படத்தை இப்படியா வெளியிடுவது... மலைக்கா அரோராவை விளாசும் ரசிகர்கள்
பிரபல ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா(49) பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.
அதன்பின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருடன்(37) நெருக்கமானார் மலைக்கா. இருவரும் காதலித்து வருகின்றனர். லிவிங் டுகெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டும் வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் இருவரும் கவலைப்படவில்லை. இருவரும் பொதுவெளியில் நெருக்கமாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அர்ஜுன் கபூர் படுக்கையில் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, அதற்கு கேப்ஷனாக எனது சொந்த சோம்பேறி பையன் என குறிப்பிட்டு அதிர்ச்சி கொடுத்தார் மலைக்கா அரோரா. இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.