ஐம்பதாவது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கும் அஞ்சலி
ADDED : 860 days ago
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் மற்றும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சலியின் ஐம்பதாவது படம் குறித்த ஒரு போஸ்டர் வெளியானது. அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் அந்த படத்திற்கு ஈகை என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காஷ்யப் என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, புஷ்பா சுனில், குக் வித் கோமாளி புகழ் உட்பட பலரும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. மேலும் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறார் அஞ்சலி. ஜூன் மாதம் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.