மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா?
ADDED : 857 days ago
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கொடி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.