உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா

வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர். சி இயக்கி வரும் அரண்மனை- 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அரண்மனை-4 படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது கால்ஷீட் கிடைக்காததால் தானே ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. இப்படத்தில் நாயகிகளாக ராசி கண்ணா, தமன்னா ஆகிய இருவரையும் ஒப்பந்த செய்திருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் என்பவரை நடிக்க வைத்திருக்கிறார். இவர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான கழுவேரி மூர்க்கன், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !