வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்!
நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தீபாவளி, வெயில், அசல் போன்ற படங்களில் நடித்தார். இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் இப்போது படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். 13 வருடங்களுக்கு பிறகு தமிழில் பாவானா தனது 86வது படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாள் முன்னிட்டு இந்த படத்திற்கு 'தி டோர் ' என்று தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கோடு படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தை பாவனாவின் சகோதரர் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் பாவனாவின் கணவர் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இப்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.