உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெஜினா படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

ரெஜினா படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

நடிகை சுனைனா தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். ட்ரிப் படத்திற்கு பிறகு தற்போது அவர் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிவாஷ் அதிதன்,ரித்து மந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !