கோபிசந்த் 31வது படத்தின் அறிவிப்பு வெளியானது
ADDED : 853 days ago
தெலுங்கு நடிகர் கோபிசந்த் தொடர்ந்து அதிரடியான குடும்ப படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ராமபாணம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கோபிசந்த் தனது 31வது படம் குறித்து அறிவித்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் ஷர்சா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பீமா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இதுவும் கோபிசந்த்தின் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கிறார்.