போர் தொழில் படத்தின் முதல்வார வசூல் இதோ
ADDED : 839 days ago
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். போலீஸ் கதையில் சஸ்பென்ஸ் படமாக வெளியான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து படத்திற்கு எதிர்பார்த்த வசூலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் தமிழ் நாட்டில் முதல் வாரம் ரூ. 11 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கேரளாவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து கேரளாவில் மட்டும் ரூ.1 கோடியை கடந்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.