உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டா 12வது படத்தின் அப்டேட்

விஜய் தேவரகொண்டா 12வது படத்தின் அப்டேட்

நடிகர் விஜய் தேவர்கொண்டா தற்போது இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 12வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளனர். இவை தவிர்த்து மிருணாள் தாக்கூர் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் விஜய் தேவரகொண்டார். சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !