ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல்
ADDED : 841 days ago
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் “மக்கா மக்கா” என்கிற புதிய ஆல்பம் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நட்பை போற்றும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடலில் இளம் நடிகர்கள் அஷ்வின் குமார், முகேன் ராவ் ஆகியோர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். கார்த்திக் அரசகுமார் இப்பாடலை இயக்கியுள்ளார். பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர். இப்பாடல் யூடியூப்பில் வெளிவந்த ஒரே நாளில் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.