தெய்வமகள் சீரியல் நடிகர்களின் ரீ-யூனியன் போட்டோஸ்!
ADDED : 859 days ago
2013ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த ‛தெய்வமகள்' தொடர் 2018ம் ஆண்டில் நிறைவுற்றது. இந்த தொடரில் நடித்த பிறகு தான் நடிகை வாணி போஜன் பிரபலமடைந்து இன்று, வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் சிலர் ரீ-யூனியனில் சந்தித்துள்ளனர். அந்த ரீ-யூனியன் புகைப்படங்களை வில்லி நடிகையான ரேகா கிருஷ்ணப்பா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அர்விந்த் கதரே, சிந்து ஷ்யாம், வெண்ணிற ஆடை நிர்மலா, வனிதா ஹரிஹரன் ரேகா கிருஷ்ணப்பா என முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ள இந்த ரீ-யூனியனில் ஹீரோ கிருஷ்ணா மற்றும் ஹீரோயின் வாணி போஜன் வரவில்லை. ரசிகர்கள் இதை குறிப்பிட்டு பிரகாஷ்-சத்யாவை மிஸ் செய்வதாக கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.