உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 மில்லியன் பார்வைகளை கடந்த ‛மாமன்னன்' டிரைலர்

10 மில்லியன் பார்வைகளை கடந்த ‛மாமன்னன்' டிரைலர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 29ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் டிரைலரும் வெளியிடப்பட்டிருந்தது. டிரைலரை பார்த்து குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இந்நிலையில் மாமன்னன் படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தொடர்ந்து யு-டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !