ஜூலை 7ல் வெளியாகும் ‛பம்பர்'
ADDED : 884 days ago
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி, தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் ‛பம்பர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூலை 7ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.