பிரேமம் பட இயக்குனரின் அடுத்த பட படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 883 days ago
நேரம், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய தமிழ் படத்தை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார் என்று அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். வித்தியாசமான காதல் கதைகளத்தில் இந்தபடம் உருவாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பின்றி சென்னையில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் தலைப்பு, முதல் பார்வை போன்றவை வெளியாகும் என்கிறார்கள்.