உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகையாக இருந்த குஷ்பு இப்போது பா.ஜ.கவில் உள்ள பிரபலமான அரசியல்வாதி. சமீபத்தில் மோசமாக விமர்சித்த திமுக., பிரமுகரை கிழித்து தொங்கவிட்டார். இதனால் அந்த பிரமுகரை கட்சியை விட்டே நீக்கியது திமுக. மகளிர் ஆணையத்தில் பொறுப்பு வகிக்கும் குஷ்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, இடும்பு எலும்பு பிரச்சினைக்காக சிகிக்சை அளிக்கப்பட்டதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !