உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்!

மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளர் ஆக வலம் வருகிறார். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களுக்கும் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக மலையாள படத்திற்கு இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, நடிகர் பிரித்விராஜ் அவரே இயக்கி நடிக்கும் புதிய படம் டைசன். இந்த படத்தின் மூலம் தான் அனிருத் மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது. இப்படத்தை கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் இந்த படம் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !