எம்.ஜி.ஆர் ரசிகராக கார்த்தி
ADDED : 843 days ago
நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறாராம். அதனால் இந்த படத்திற்கு ரத்தத்தின் ரத்தமே மற்றும் வா வாத்தியாரே போன்ற தலைப்புகளை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.