உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் சிங்கர் 9 : சாதிய அழுத்தங்களை தாண்டி சாதனை படைத்த அருணா

சூப்பர் சிங்கர் 9 : சாதிய அழுத்தங்களை தாண்டி சாதனை படைத்த அருணா

இரட்டை சகோதரிகளான அருணா மற்றும் அகிலாவை அவரது பாட்டி தான் கோயில்களில் நடக்கும் இசை வகுப்புகளில் சேர்ந்துள்ளார். அதன்பின் படிப்படியாக இசையை கற்றுக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருணா, தனது திறமையால் இறுதிபோட்டிக்கும் தேர்வானார். பானை செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவர் ஒருமுறை எபிசோடில் பேசிய போது கோயில்களில் பாடச் செல்லும் போது தாங்கள் சந்திக்கும் சாதிய ரீதியான அழுத்தங்கள் குறித்து சோகத்துடன் கூறியிருந்தார். இன்று அதேமேடையில் டைட்டில் பட்டம் வென்றதுடன், சூப்பர் சிங்கர் வரலாற்றிலேயே டைட்டில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் அருணா படைத்துள்ளார். இசைக்கு சாதி, மதம் கிடையாது என்பதை சாதி வெறியர்கள் தலையில் ஆணி அடித்தது போல் சாதித்து காட்டிய அருணாவுக்கு மக்கள் பெரும்பாலானோர் தங்கள் அன்புகளை பகிர்ந்து வருகின்றனர். இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் எழுதும் திறன் கொண்ட அவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !