மாவீரன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
ADDED : 841 days ago
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாக உள்ள திரைப்படம் மாவீரன். இதில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 2ம் தேதி அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து வீடியோவாக வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர்.