உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஞ்சிதமே… பாடலுக்கு ஆடிய சிறுவன் : ரசித்து மகிழ்ந்த ராஷ்மிகா

ரஞ்சிதமே… பாடலுக்கு ஆடிய சிறுவன் : ரசித்து மகிழ்ந்த ராஷ்மிகா

'வாரிசு' படத்தில் தமன் இசையில் விஜய், ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடனமாடிய 'ரஞ்சிதமே'… பாடல் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அந்தப் பாடலுக்கு ரீல் வீடியோக்களைப் பதிவிட்டவர்களும் அதிகம்.

நேற்று டுவிட்டர் தளத்தில் ஒருவர் ஒரு திருமண நிகழ்வில் சிறுவன் ஒருவன் இளைஞர்களுடன் சேர்ந்து 'ரஞ்சிதமே…' பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்து ராஷ்மிகா, “ஐ லவ் திஸ்… இந்த வீடியோவை ரசிக்கிறேன். பாடல்களையும் நடனத்தையும் நீங்கள் மிகவும் ரசித்து அனுபவிப்பது எனக்கு மிக மிக மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா பகிர்ந்த அந்த வீடியோ இதுவரையிலும் 6 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.

விஜய்யின் 'லியோ' பாடலான 'நா ரெடி' பாடலை அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில், ராஷ்மிகா 'ரஞ்சிதமே' பாடலைப் பற்றிப் பதிவிட்டதும் அதுவும் மீண்டும் ரசிக்கப்பட்டு வருகிறது, அந்த சிறுவனின் நடனத்திற்காக….

https://twitter.com/iamRashmika/status/1673301034205081603



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !